தோப்புக்கரணம் போடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
பொதுவாகவே உடற்பயிற்சி செய்வது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கும். அதிலும் குறிப்பாக தோப்புக்கரணம் போட்டால் நம் உடல் உறுப்புகளுக்கு நன்மையை ஏற்படுத்துகிறது. அது குறித்து பார்க்கலாம்.
தோப்புக்கரணம் போடும்போது உடலின் இயக்கம் சீர்படுவது மட்டுமில்லாமல் உறுப்புகளின் செயல்பாட்டை தூண்ட உதவுகிறது.
மேலும் தண்டுவடத்திற்கு தேவையான சக்தியை கொடுப்பதும் ரத்த ஓட்டத்தை சீராக்கவும் முக்கிய பங்கு வகிக்கிறது. முக்கிய குறிப்பாக மூன்று நிமிட உடற்பயிற்சி செய்தாலே மற்ற எந்த உடற்பயிற்சியும் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.
ஏனெனில் இதுவே நம் உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை கொடுத்து உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவும்.
எனவே நம் முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக இருக்கும் தோப்புக்கரணத்தை போட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

