Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

குடிபோதயில் செழியன்.ஷாக்கான பாக்கியா.இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

baakiyalakshmi serial episode update 26-06-23

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் செழியன் மாலினியை பார்க்க போன இடத்தில் வீட்டில் நடந்த பிரச்சனைகளை சொல்லி வருத்தப்பட்டு இப்ப இருக்கிற டென்ஷனுக்கு சரக்கே அடிக்கலாம் போல இருக்கு என்று சொல்ல அவள் சரக்கு எடுத்து வந்து கொடுத்து குடிக்க சொல்கிறார். செழியன் குடிக்க பிறகு மாலினி தனது வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனை பற்றி பேசி எனக்கு உங்கள ரொம்ப பிடிச்சிருக்கு என செழியனின் கையைப் பிடிக்க அவன் அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து கிளம்பி விடுகிறான்.

வீட்டுக்கு வந்த செழியன் கதவைத் தட்ட பாக்கியா கதவை திறக்க பிறகு பாக்யாவிடம் உன் மேல எனக்கு அன்பு அதிகமா இருக்கு ஆனா நீ பிரச்சனைல இருக்கும்போது எப்படி பேசி கன்சோல் பண்றதுன்னு எனக்கு தெரியல அதனாலதான் நான் பேசாம அமைதியா இருந்திடுவேன். இனிமேல் நானும் உன் பக்கம் தான் என்று பேச பாக்யா குடிச்சிருக்கியா என்று கேட்க முதலில் இல்லை என சொல்லும் செழியன் பிறகு லைட்டாக குடித்திருப்பதாக சொல்ல பாக்கியா அவனை திட்டுகிறார். செழியன் இனிமே குடிக்க மாட்டேன் என சத்தியம் செய்கிறான்.

மறுநாள் காலையில் பாக்கியா பழனிச்சாமி வீட்டுக்கு வந்து அதை சமையல் ஆர்டரை எடுத்து செய்வதாக சொல்ல அவர் நேத்து முடியாது என்று சொன்னீர்கள் என்று கேட்க பாக்யா வீட்டில் நடந்த பிரச்சனைகளை சொல்கிறார். உடனே பழனிச்சாமி உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்க எனக்கு பணம் எல்லாம் வேண்டாம் அந்த சமையல் ஆர்டர் மூலம் கிடைக்கும் பணமே போதும் என சொல்கிறார்.

இதைத்தொடர்ந்து எழில் வேகமாக வெளியே கிளம்ப அப்போது அமிர்தா என்ன இன்னைக்கு ரொம்ப ஸ்மார்ட்டா இருக்கீங்க எங்க போறீங்க? என்று கேட்க பழனிசாமி சார் சொன்ன தயாரிப்பாளரை சந்திக்க போவதாக சொல்கிறார். அவர் மட்டும் படம் பண்ண ஒத்துக்கிட்டா ஓரளவுக்கு பணம் கிடைக்கும் அதை வைத்து வீட்டு பிரச்சனையை சமாளிக்கலாம் என எழில் சொல்கிறார்.

இதனைத் தொடர்ந்து பாக்கியா தன்னுடன் சமைப்பவர்களை வீட்டுக்கு அழைத்து இந்த சமையல் ஆர்டர் பற்றி பேச ஒரு நாளைக்கு 5000 பேருக்கு சமைக்கணுமா? அதெல்லாம் ரொம்ப கஷ்டம் இந்த ஆர்டர் வேணாம்னு சொல்லிடுங்க என்று சொல்ல பாக்கியா அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshmi serial episode update 26-06-23
baakiyalakshmi serial episode update 26-06-23