Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

முடி வளர்ச்சிக்கு உதவும் தேங்காய் தண்ணீர்…!

Coconut water helps hair growth

முடி வளர்ச்சிக்கு தேங்காய் தண்ணீர் பயன்படுகிறது.

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் முடி உதிர்தல் பிரச்சனை இருக்கிறது. அதனை சரி செய்ய சிலர் பல்வேறு ஷாம்புகளையும் எண்ணெய்களையும் பயன்படுத்துகின்றனர். ஆனால் சிலருக்கு நன்மையை கொடுத்தாலும் அது பலருக்கு பக்க விளைவுகளையும் தீங்கையும் விளைவிக்கும். அப்படிப்பட்ட நிலையில் முடியின் ஆரோக்கியத்திற்கு தேங்காய் தண்ணீர் பயன்படுத்துவது எப்படி என்று பார்க்கலாம். பொதுவாகவே தேங்காய் தண்ணீர் பல ஆரோக்கிய நன்மைகளை நம் உடலுக்கு கொடுக்கக் கூடியது என்று அனைவருக்கும் தெரியும்.

தேங்காயை எடுத்து அதை உடைத்து அதில் இருக்கும் தண்ணீரை வெளியே எடுத்துக் கொண்டு தலை முழுவதும் தடவி பிறகு கழுவி வர வேண்டும். அப்படி கழுவி வந்தால் முடி கருப்பாகவும் நீளமாகவும் வளர உதவும்.

மேலும் முடி அடர்த்தியாக வளர வெங்காயத்திலிருந்து சாறை தனியாக பிரித்து எடுத்து அதில் தேவையான நீரை சேர்த்து முடியில் தடவி கழுவி விட வேண்டும்.

இது மட்டும் இல்லாமல் தேங்காய் எண்ணெயில் ஒரு கைப்பிடி கருவேப்பிலை சேர்த்து கொதிக்கவிட்டு ஆரிய பின் அதை தலையில் மசாஜ் செய்து அரை மணி நேரத்திற்கு பிறகு குளிக்க வேண்டும்.