தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பழனிச்சாமி அம்மா பாக்யாவின் குடும்பத்தார் எல்லோரும் உட்கார்ந்து பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப நல்லவங்களா இருக்காங்க இந்த வரன் நல்லபடியா அமைந்திட்டா அடுத்த மாசம் கல்யாணத்த வச்சுக்கலாம் என பேசிக்கொண்டு இருக்கின்றனர். மறுபக்கம் பழனிச்சாமியும் சந்திராவும் பேசிக் கொண்டிருக்கும் போது எல்லாவற்றையும் பற்றி விசாரிக்கும் அவர் உங்க அம்மாவையும் நான்தான் பார்த்துக்கணுமா என கேள்வி கேட்க பழனிச்சாமியின் முகம் மாறுகிறது.
பிறகு பெண் வீட்டார் கிளம்பி சென்றதும் பழனிச்சாமி இந்த கல்யாணம் வேண்டாம் என்று சொல்ல எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். அந்த பொண்ணு கொஞ்சம் படிச்ச மாப்பிள்ளையை எதிர்பார்க்குது என சொல்ல பாக்கியா பொண்ணுங்க படிச்சவங்க எல்லாம் எதிர்பார்க்க மாட்டாங்க, நல்லபடியா பாத்துக்கிட்டா போதும்னு தான் நினைப்பாங்க என்று சொல்கிறார். இருந்தாலும் பழனிச்சாமி இந்த கல்யாணம் செட் ஆகாது வேண்டாம் என மன்னிப்பு கேட்கிறார்.
பிறகு ராமமூர்த்தி சரி விடுங்க இந்த பொண்ணு இல்லனா இன்னொரு பொண்ணு என சொல்ல ஈஸ்வரியும் ஆமா நிறைய சொந்தக்காரர் பொண்ணு இருக்காங்க பார்க்கலாம் என்று சொல்கிறார். மறுபக்கம் கோபி காரை வேக வேகமாக ஓட்டி வர மெதுவா போங்க என ராதிகா சொல்கிறார்.
மயூ போகும்போது பீச்சுக்கு போகலாம் என்று சொல்ல கோபி வீட்டுக்கு போகலாம் புயல் மழை வரப்போகுது என சொல்லி சமாளித்து அவர்களை அழைத்துச் செல்ல ராதிகா நாங்க எங்க வீட்டுக்கு போயிட்டு அம்மாவை பாத்துட்டு வரோம் என்று சொல்ல கோபி சரியென சொல்கிறார். ராதிகா கோபியையும் கூப்பிட எனக்கு டயர்டா இருக்கு நான் போய் ரெஸ்ட் எடுக்கிறேன் என சொல்கிறார். நீங்க அம்மாவை பாத்துட்டு பொறுமையா வாங்க என சொல்ல அங்கேயே இருந்தா கூட உங்களுக்கு சந்தோஷம் தானே என்று ராதிகா கேட்க அதுல என்ன சந்தேகம் ரொம்ப சந்தோஷம் என கோபி உளறிவிட ராதிகா சண்டை போடுகிறார். உடனே கோபி நான், நீ, மயூ என எல்லோரும் அந்த வீட்ல இருந்தா யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்ல அதுதான் சொன்னேன் என சொல்கிறார்.
இந்த பக்கம் பழனிச்சாமி வீட்டில் இருந்து கிளம்புவதாக சொல்லி வெளியே வர அவரது அம்மா பையை உள்ளவே வச்சிட்டேன் என திரும்பவும் உள்ளே செல்கிறார். இதனால் தனியாக இருக்கும் பாக்யாவும் பழனிச்சாமியும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
அப்போது பாக்கியா கல்யாணம் பண்ணிக்கிட்டா தான் நமக்குன்னு ஒரு குடும்பம் வாரிசு எல்லாம் வரும் என பேச வெளியில் இருந்து வீட்டுக்கு வரும் கோபி இதை கேட்டு சுவத்திலேயே இடித்துக் கொள்கிறார். நீங்க சொல்லித்தான் நான் பொண்ணு பார்க்க வந்தேன் என பழனிச்சாமி சொல்ல இப்பவும் நான் சொல்றேன் கல்யாணம் பண்ணிக்கோங்க என்று சொல்ல கோபி வாயில் அடித்துக் கொள்கிறார்.
பிறகு உள்ளே செல்லும் கோபியை தடுத்து நிறுத்தும் பழனிச்சாமி எப்படி இருக்கீங்க என ஆங்கிலத்தில் தவறாக கேட்க கோபி புரியாமல் முழிக்க பிறகு பழனிச்சாமி பாக்யாவின் அருகே சென்று என்னை ஞாபகம் இருக்கான்னு எப்படி கேட்கணும் என கேட்க இருவரும் நெருக்கமாக இருப்பதை பார்த்து கோபி இன்னும் காண்டாகிறார்.
இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
