கொத்தமல்லி விதை நீர் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் பாதிக்கப்படுவது உடல் பருமன். உடல் பருமனால் பாதிக்கப்பட்டால் பலரும் டயட்டுகளும் உடற்பயிற்சிகளும் உணவில் கட்டுப்பாட்டுடனும் இருப்பார்கள். அதுமட்டுமில்லாமல் உடல் பருமன் காரணமாக சில பல நோய்களும் நம் உடலில் வந்து சேரும். குறிப்பாக இதய நோய் மற்றும் நீரிழிவு நோய்க்கு ஒரு முக்கிய காரணமாக இருந்து விடும்.
அப்படி இருக்கும் கொழுப்பை கரைத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் கொத்தமல்லி விதை நீரை எப்படி செய்வது என்று பார்க்கலாம்ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி விதைகளை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும்.
வெறும் வயிற்றில் குடிக்கும்போது இது உடலில் இருக்கும் கொழுப்பை எரிக்கிறது. இது கொழுப்பை கரைப்பது மட்டுமில்லாமல் வயிற்று வலி ,காய்ச்சல், செரிமான பிரச்சனை, பசியின்மை, மலச்சிக்கல், வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சனைகளுக்கும் இது ஒரு சிறந்த மருந்தாகவே இருக்கிறது.
நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.குறிப்பாக இதில் இருக்கும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.
எனவே ஆரோக்கியம் தரும் கொத்தமல்லி விதை நீரை குடித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.