காட்டு யானம் அரிசியில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
காட்டு யானம் அரிசி அதிகமாக காட்டில் தான் வளரும். இந்த அரிசி உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது. அதனைக் குறித்து பார்க்கலாம்.
இந்த அரிசி உடலில் ஏற்படும் புற்றுநோய் செல்களை அழித்து புற்றுநோயை குணப்படுத்துவது முக்கிய பங்கு வகிக்கிறது.
மேலும் மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் தொடர்ந்து இந்த அரிசியை சாப்பிட்டு வர வேண்டும். இது மட்டும் இல்லாமல் நீரிழிவு நோயாளிகளுக்கு மருந்தாக இருக்கிறது. ஏனெனில் இந்த அரிசியை சமைத்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை அளவு சமநிலையாக இருப்பதால் நீரிழிவு நோய் நம்மை நெருங்க முடியாது.
இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் அவதிப்படுபவர்களுக்கு இந்த அரிசியில் இருக்கும் ஆன்ட்டி ஆக்சிடன்ட் மிகவும் உதவுகிறது.
முக்கிய குறிப்பாக காட்டுயானம் அரிசி வேக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். அதனால் 12 மணி நேரம் ஊற வைத்து பிறகு வடிப்பது சிறந்தது.
மிக முக்கியமாக குழந்தை பாக்கியம் இல்லாமல் அவதிப்படுபவர்கள் இந்த அரிசியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நிச்சயம் ஆண்களின் விந்து விருத்தி அதிகமாகி குழந்தை பாக்கியம் நிச்சயம் அடையலாம்.
எனவே ஆரோக்கியம் தரும் காட்டு யானம் அரிசியை சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.