தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இது குறித்த வீடியோவில் ஜான்சிராணி அந்த எஸ் கே ஆர் குடும்பத்தை சும்மா விடமாட்டேன் எனது சபதம் எடுக்க மறுப்பக்கம் குணசேகரன் அவருடைய அம்மாவிடம் நாளையில் இருந்து ஆட்டத்தை ஆரம்பிக்க போறேன், எல்லாரும் என்ன நடக்குதுன்னு பாக்கத்தானே போறீங்க என வார்னிங் கொடுக்கிறார்.
அதற்கு அடுத்ததாக ஜனனி கௌதமுக்கு போன் போட்டு என்ன ஆச்சு என கேட்க அவர் அருணை கூட்டிக்கிட்டு என ரகசியம் எதையோ சொல்கிறார்.


