‘கூழாங்கல்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் தற்போது இயக்கி வரும் திரைப்படம் ‘கொட்டுக்காளி’. இப்படத்தில் சூரி மற்றும் மலையாள நடிகை அன்னா பென் இணைந்து முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் தி லிட்டில் வேவ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்.
இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. ‘கொட்டுக்காளி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, கொட்டுக்காளி திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் தனது சமூக வலைதளத்தில் புகைப்படக்களை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.
We've wrapped up filming for our #Kottukkaali! Now, it's full speed ahead with post-production to bring you an unforgettable cinematic experience.#KottukkaaliWrapUp@Siva_Kartikeyan @KalaiArasu @sooriofficial @PsVinothraj @benanna_love @sakthidreamer @thecutsmaker… pic.twitter.com/RVo4KflQqC
— Sivakarthikeyan Productions (@SKProdOffl) May 22, 2023