இந்த ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படங்களில் ஒன்றாக இடம்பெற்றிருக்கும் திரைப்படம் பத்து தல. சிம்பு நடிப்பில் கடந்த மார்ச் 30ஆம் தேதி திரைக்கு வந்த இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது.
இப்படத்தை சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமான ஒபெலி N கிருஷ்ணா இயக்கி இருந்தார். இப்படத்தின் வெற்றியா ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமான இவர் அடுத்ததாக தமிழில் ராமன் தேடிய சீதை, சாருலதா, ஹே சினாமிக்க மற்றும் இந்தியில் ‘அலோன்’ அகிய படங்களை தயாரித்த குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் என்ற பிரபல தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ள பான் இந்தியா திரைப்படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதனை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்திய திரைப்பட துறையின் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் இணைந்திருக்கும் பத்து தல இயக்குனர் கிருஷ்ணாவுக்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டு இருக்கிறார். இதனைத் தொடர்ந்து பலரும் அவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். அது தற்போது வைரலாகி வருகிறது.
Thank you so much sir , need your blessing always ????❤️ https://t.co/01S4vtGzYw
— Obeli.N.Krishna (@nameis_krishna) May 5, 2023