Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

AK 62 படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்.எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

ajith-62-is-goriyan-movie-remake-bismi-reveals

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் பொங்கலுக்கு வெளியான துணிவு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இதனைத் தொடர்ந்து அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருந்த நிலையில் அவர் சொன்ன கதை பிடிக்காத காரணத்தினால் இந்த வாய்ப்பு மகிழ் திருமேனிக்கு சென்றுள்ளது. படத்தில் பூஜை கூட ரகசியமாக முடிந்து விட்டதாக சொல்லப்படும் நிலையில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருக்கிறது.

இந்த நிலையில் பிரபல பத்திரிக்கையாளர் அளித்த பேட்டி ஒன்றில் அஜித்தின் பிறந்தநாள் ஆன மே ஒன்றாம் தேதி படத்தின் அறிவிப்பு வெளியிட அதிக வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் இது கொரியன் படம் ஒன்றின் ரீமேக் ஆக உருவாகும் சூழல் தான் இருந்தது. ஆனால் அதன் பிறகு மகிழ்திருமேனி ஒரு கதையை சொல்ல அந்த கதை அஜித்திற்கு பிடித்துப் போக அதையே படமாக்க முடிவு செய்து விட்டனர்.

மே ஒன்றாம் தேதி பட அறிவிப்பு வெளியாகி அந்த மாதமே படப்பிடிப்பு தொடங்கும் என தெரிவித்துள்ளார். இந்த படத்திற்காக அஜித் தன்னுடைய வேர்ல்ட் டூரை தள்ளி வைத்து காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

ajith-62-is-goriyan-movie-remake-bismi-reveals

ajith-62-is-goriyan-movie-remake-bismi-reveals