Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வாரிசு படத்தின் வெற்றி குறித்து விஜய் சொன்ன வார்த்தை. வைரலாகும் பதிவு

thalapathy-had-to-say-about-the-success-of-varisu

கோலிவுட் திரை உலகில் மாபெரும் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். மாபெரும் நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரை தொடர்ந்து தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் குடும்ப திரைப்படமாக கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியாகி வெற்றி பெற்ற வாரிசு திரைப்படத்தின் வெற்றி குறித்து விஜய் என்ன சொன்னார்? என்ற கேள்வியை ரசிகர் ஒருவர் இப்படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர், படத்தின் ரிசல்ட் பொங்கல் வின்னராக அமைந்ததற்கு விஜய் மகிழ்ச்சியாக இருந்தார் என்று தெரிவித்திருக்கிறார். இந்த பதிவுகளை ரசிகர்கள் தற்போது ட்ரெண்டிங்காக்கி வருகின்றனர்.