தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் கடந்த ஆண்டு பிரபல இயக்குனராக விளங்கும் விக்னேஷ் சிவனை காதல் காதல் திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதியினர் வெகு நாட்களாக அக்கு குழந்தைகளின் பெயர்களை வெளியிடாமல் மௌனம் காத்திருந்தனர்.
அதன் பிறகு சில தினங்களுக்கு முன்பு அக்குழந்தைகளுக்கு அவர்கள் உயிர் ருத்ரோநீல் N சிவன், உலக் தெய்விக் N சிவன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தனர், அதில் N என்பது நயன்தாராவை குறிப்பதாகவும் சமூக வலைத்தளத்தின் வாயிலாக அறிவித்திருந்தனர்.
அந்த தகவல் இணையத்தை ஆக்கிரமித்து இருந்ததை தொடர்ந்து தற்போது நயன்-விக்கி தம்பதியினர் குலதெய்வ கோவிலான தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே மேலவளத்தூரில் உள்ள ஆற்றங்கரை ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் வழிபாடு செய்துள்ளனர். அப்போது திருச்சி விமான நிலையத்திற்கு வந்த நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு ரசிகர்கள் பூங்கொத்துகளை வழங்கி உற்சாகத்துடன் வரவேற்றுள்ளனர். இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
Queen slayed us today, with her traditional look & modern look ????❤️#LadySuperStar #Nayanthara @VigneshShivN #Jawan #Iraivan #LadySuperStar75 pic.twitter.com/l8mDawlufq
— Ever & Forever for Nayan ???????? (@SathsaraniSew) April 5, 2023