தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்துடன் இருந்து வரும் இவர் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார்.
சமூக வலைதள பக்கங்களான ட்விட்டர் மற்றும் பேஸ்புக் உள்ளிட்டவைகளில் தளபதி விஜய்க்கு அதிகாரப்பூர்வ கணக்கு இருந்து வந்த நிலையில் நேற்று எந்தவித முன்னறிவிப்புமின்றி தளபதி விஜய் instagram பக்கத்தில் என்ட்ரி கொடுத்தார்.
முதன் போஸ்ட்டாக ஸ்டைலான லுக்கில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஹாய் நண்பா நண்பி என பதிவு செய்திருந்தார்.
தளபதி விஜய் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்த 17 மணி நேரத்தில் 3.9 மில்லியன் பேர் அவரை பின் தொடர ஆரம்பித்துள்ளனர். விரைவில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விஷயத்தை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
View this post on Instagram

