கொத்தமல்லி தண்ணீரில் இருக்கும் நன்மைகளை குறித்து பார்க்கலாம்.
கொத்தமல்லி சைவ உணவிற்கு மட்டுமில்லாமல் அசைவ உணவிற்கும் சுவை கூட்டுவதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது.
கொத்தமல்லி தண்ணீரை குடித்து வந்தால் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். இதில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது.
உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாக்க மிகவும் பயன்படுகிறது. மேலும் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.
வெறும் வயிற்றில் தினமும் கொத்தமல்லி தண்ணீர் குடித்து வந்தால் செரிமான மண்டலம் பலமடைவது மட்டுமில்லாமல் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்தும் விடுபட உதவுகிறது.
மேலும் உடலில் நச்சுக்களை வெளியேற்றுவது, மாதவிடாய் பிரச்சனை, மற்றும் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.