தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. ரசிகர்களால் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படும் இவர் கடந்த ஆண்டு பிரபல இயக்குனரான விக்னேஷ் சிவனை காதல் திருமணம் செய்து கொண்டார்.
அதன் பிறகு வாடகை தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளுக்கு தாய் தந்தையாக மாறி இருக்கும் நயன்தாரா & விக்னேஷ் சிவன் தம்பதியினர் முதல் முறையாக தங்களது இரட்டை குழந்தைகளுடன் வெளியே சென்றிருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதன்படி சமீபத்தில் மும்பை சென்றுள்ள நயன்தாரா & விக்னேஷ் சிவன் தம்பதியினர் அங்குள்ள விமான நிலையத்திற்கு தங்களது இரட்டை குழந்தைகளுடன் சென்றுள்ளனர். அப்போது செய்தியாளர்களால் எடுக்கப்பட்டிருந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
#Nayanthara and #VigneshShivan Spotted At Mumbai Airport With Their Twin Sons pic.twitter.com/AlcrZVjea4
— FirstShowz ???????? (@firstshowz) March 8, 2023
The Happening Couple @VigneshShivN & #Nayanthara with their #Uyir & #Ulagam spotted in #Mumbai Airport@castingpeoplenm @backscreenmagic #NikilMurukan #NM pic.twitter.com/vNkBlUlXcs
— Nikil Murukan (@onlynikil) March 8, 2023