Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விடுதலை படம் குறித்து புகழ்ந்து பேசிய இளையராஜா..! வைரலாகும் தகவல்

ilaiyarajaa-viral-speech-about-viduthalai

தமிழ் சினிமாவில் இசை ஜாம்பவானாக திகழ்ந்து கொண்டிருப்பவர் இசைஞானி இளையராஜா. இவர் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் விடுதலை திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். நேற்றைய தினம் விடுதலை படத்தின் முதல் பாகத்திற்கான ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளையராஜா பெருமிதமாக பேசிய சுவாரசியமான தகவல்கள் தற்போது வைரலாகி வருகிறது.

அதில் அவர், விடுதலை திரைப்படம் இதுவரை திரையுலகம் சந்திக்காத படமாக இருக்கும், வெற்றிமாறனின் ஒவ்வொரு திரைக்கதையும் வெவ்வேறு திரைக்கதையாக உள்ளது. கடலில் ஒவ்வொரு அலையும் தனித்தனியாக வந்து கொண்டிருக்கும், அதுபோல வெற்றிமாறன் ஒவ்வொரு படத்திற்கும் வெவ்வேறு கதைகளை அமைப்பதை பார்க்க பெருமையாக இருக்கிறது. இதை நான் 1500 படத்திற்கு இசையமைத்த பின் கூறுகிறேன். திரையுலகத்திற்கு முக்கியமான இயக்குனர் வெற்றிமாறன் என இளையராஜா அந்நிகழ்ச்சியில் பெருமையாக கூறியுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

ilaiyarajaa-viral-speech-about-viduthalai
ilaiyarajaa-viral-speech-about-viduthalai