Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வாத்தி படத்தின் தெலுங்கு புரோமோஷனில் கலந்து கொண்ட தனுஷ்.!! வைரலாகும் கிளிக்ஸ்

actor dhanush vaathi promotion photos viral update

தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் வெங்கி அட்டூரி இயக்கத்தில் உருவாகி இருக்கும் வாத்தி திரைப்படம் வரும் பிப்ரவரி 17ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நேரடியாக வெளியாகியுள்ளது. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் இணையதளத்தில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் ஹைதராபாத்தில் இப்படத்தின் தெலுங்கு பிரமோஷன் சமீபத்தில் நடைபெற்றது. தெலுங்கில் சார் என்ற பெயரில் வெளியாக இருக்கும் இப்படத்தின் பிரமோஷனில் கலந்து கொண்ட நடிகர் தனுஷின் க்யூட்டான புகைப்படங்கள் ரசிகர்களால் இணையதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.