அதிக அளவில் பப்பாளி சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பார்க்கலாம்.
பொதுவாகவே அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்று பப்பாளி. இதில் பல ஆரோக்கிய நன்மைகள் இருப்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இதை அதிகமாக சாப்பிட்டால் ஏற்படும் பக்க விளைவுகளை குறித்து நீங்கள் அறிவீர்களா? வாங்க பார்க்கலாம்.
ஒரு நாளைக்கு 100 லிருந்து 120 கிராம் பப்பாளி மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். அதிகமாக சாப்பிடும் போது உணவுக் குழாயில் சுருக்கம் ஏற்படும். அது மட்டும் இல்லாமல் தொண்டையில் சேதம் ஏற்படும்.
அதிகப்படியாக பப்பாளி சாப்பிடும்போது வயிற்று பிரச்சனைகளான செரிமான பிரச்சனை வயிற்று வலி வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.
நீரிழிவு நோயாளிகள் பப்பாளி பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
எனவே ஆரோக்கியம் தரும் பப்பாளியாக இருந்தாலும் அளவோடு சாப்பிட்டால் தான் நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பதை அறிந்து கொள்வோம்.