ஹாலிவுட் திரை உலகில் பிரபல இயக்குனராக வலம் வரும் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான அவதார் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் இவர் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டில் லியானர்டோ டிகாப்ரியா மற்றும் கேட் வின்ஸ்லெட் நடிப்பில் காதல் காவியமாக வெளியான டைட்டானிக் திரைப்படத்தின் ரீ- ரீலீஸ் குறித்த தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதாவது, தற்போது வரை காதல் திரைப்படம் என்றாலே அனைவருக்கும் நினைவூட்டும் திரைப்படமாக இருக்கும் டைட்டானிக் திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவு பெற்றிருப்பதை கொண்டாடும் வகையில் வரும் பிப்ரவரி 10ஆம் தேதி 3d மற்றும் 4k தொழில்நுட்பத்தில் ஹை ஃப்ரேம் ரேட்டில் ரீ மாஸ்டர் செய்து மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய இருப்பதாக பட குழு தெரிவித்து இருக்கிறது. காதலர் தின மாதத்தில் காதலர்களுக்கு விருந்தாக வெளியாக இருக்கும் இப்படம் குறித்த அப்டேட் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்து இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
Some stories are timeless. In celebration of the 25th anniversary, please join us in experiencing Titanic in remastered 4K 3D. Opening February 10th in theaters.https://t.co/qBvaj1crCn
— James Cameron (@JimCameron) January 10, 2023