Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நடிகர் சித்தார்த் மீது புகார். வைரலாகும் பரபரப்பு தகவல்

district-leader-file-a-complaint-against-actor siddharth

மதுரை விமான நிலையத்தில் தனது பெற்றோரை இந்தியில் பேசச் சொல்லி நீண்ட நேரம் காத்திருக்க வைத்ததாக சித்தார்த் குற்றம் சாட்டியிருந்தார். இவருக்கு ஆதரவு தெரிவித்து சு. வெங்கடேசன் பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார். தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான சித்தார்த், மதுரை விமான நிலையத்தில் தனது பெற்றோரை இந்தியில் பேசச் சொல்லி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருக்க வைத்ததாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மதுரை விமான நிலையம் வந்த வயதான தனது பெற்றோரின் உடைமையை சி.ஐ.எஸ்.எப் வீரர்கள், சோதனை செய்ததாக கூறியுள்ளார்.

சித்தார்த் பதிவு அப்போது அவரது பெற்றோர் ஆங்கிலத்தில் பேச முற்பட்டபோது, தங்களிடம் இந்தியில் தான் பேச வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தியதாகவும், கூட்டமே இல்லாத மதுரை விமான நிலையத்தில் இருபது நிமிடங்கள் வரை தனது பெற்றோரை காத்திருக்க வைத்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இவருக்கு ஆதரவு தெரிவித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது இணையப் பக்கத்தில், “மதுரை விமானநிலையத்தில் சி.ஐ.எஸ்.எப் வீரர்கள் ஹிந்தியில் பேசி கடுமையாக நடந்து கொண்டதாக திரைக்கலைஞர் சித்தார்த் எழுப்பியுள்ள குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரனை மேற்கொள்ள வேண்டுமென மதுரை விமான நிலைய அதிகாரிகளிடம் கோரியுள்ளேன்” என்று பதிவிட்டிருந்தார். சித்தார்த் இந்நிலையில், நடிகர் சித்தார்த் மீது இந்து மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் மதுரை காவல் ஆணையரிடம் புகாரளித்துள்ளார். அந்த புகாரில், மொழி பிரச்சனையை தூண்டும் வகையில் சித்தார்த்தின் சமூக வளைதளப் பதிவு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

district-leader-file-a-complaint-against-actor siddharth
district-leader-file-a-complaint-against-actor siddharth