வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாக உள்ளது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தில் விஜயுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, யோகி பாபு, சரத்குமார், பிரபு, ஷாம், பிரகாஷ்ராஜ், குஷ்பூ உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
தமன் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் அனைத்து பாடல்களும் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஆடியோ லாஞ்சில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் குறித்த அப்டேட் ஒன்று இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில், வாரிசு திரைப்படத்தின் ட்ரெய்லர் வரும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 1ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல் இணையத்தில் வேகமாக பரவி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அதிகாரிவபூர்வமான அறிவிப்பை படக்குழு விரைவில் தெரிவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Buzz: #VarisuTrailer on Jan 1st ???????? pic.twitter.com/XS2tx3K8QJ
— Vijay Fans Updates (@VijayFansUpdate) December 27, 2022