சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே சீரியலில் வில்லியாக நடித்து பிரபலமானவர் தர்ஷா குப்தா. இந்த சீரியலில் இருந்து பாதியில் விலகிய இவர் அதன் பின்னர் படங்களில் நாயகியாக நடிக்க தொடங்கியது மட்டுமல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் பிரபலமானார்.
தற்போது ‘ஓ மை கோஸ்ட்’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காககாத்துக் கொண்டிருக்கும் தர்ஷா குப்தா அடுத்தடுத்த பட வாய்ப்புகளுக்காக தனது சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் உடையில் வேற லெவலில் கவர்ச்சி காண்பித்து அனைவருக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்து தெரிவித்து புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். அந்த புகைப்படங்கள் அனைவரது கண்களையும் கவர்ந்து இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது.
View this post on Instagram

