Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வைரலாகும் நயன்தாராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

nayanthara-recent-photo-viral update

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. அஜித் விஜய் ரஜினி சூர்யா உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ள இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு பல சர்ச்சைகளை தாண்டி இரட்டை குழந்தைக்கு அம்மாவாகியுள்ள நயன்தாரா தற்போது தனது நேரங்களை குழந்தைகளுடன் செலவிட்டு வருகிறார். மேலும் இவரது நடிப்பில் கனெக்ட் திரைப்படம் வரும் 22 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் கடந்த வாரம் இவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

அதாவது கடந்த வாரம் வெளியான புகைப்படத்தில் நயன்தாராவின் முகம் பார்க்க வயதானது போல் இருப்பதாக பலரும் கமெண்ட் செய்து விமர்சித்து வந்தனர். இந்நிலையில் பிரபல லிப்பாம் கம்பெனி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நயன்தாராவின் அழகான க்யூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த புகைப்படங்களை கண்ட ரசிகர்கள் பல லவ் சிம்பல் இமேஜ்களை பறக்கவிட்டு இணையத்தில் ட்ரெண்டிங் ஆக்கி வருகின்றனர்.