Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

OTT யில் வெளியான காந்தாரா.வைரலாகும் மாஸ் தகவல்.

kantara-movie-ott-release details

கன்னட மொழியில் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்திருந்த திரைப்படம் தான் காந்தாரா. விஜய் கிராகந்தூர் தயாரிப்பில் பி. அஜெனீஷ் லோக்நாத் இசையமைப்பில் உருவாகி இருந்த இப்படத்தில் ரிஷப் செட்டியுடன் இணைந்துகிஷோர், அச்யுத் குமார், பிரமோத் ஷெட்டி மற்றும் நடிகை சப்தமி கவுடா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்த இப்படம் கன்னட மொழியில் மட்டும் 150.ரூ கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

மேலும் இப்படம் கன்னட மொழியில் மட்டுமின்றி தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளியிடப்பட்டு ரூ.350 கோடிக்கு மேல் வசூலித்து மாபெரும் வெற்றியை பெற்றிருந்தது. இந்நிலையில் காந்தாரா திரைப்படம் நவம்பர் 24ஆம் தேதியான இன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமிழ், ஹிந்தி, கன்னடா, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. இதனால் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு இந்த தகவல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.