உடல் எடையை அதிகரிக்க பேரிச்சம்பழம் பெருமளவில் உதவுகிறது.
பொதுவாகவே பேரிச்சம்பழம் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். ஏனெனில் இதில் அதிக ஊட்டச்சத்துக்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே. இது மிகவும் நன்மை அளிக்க கூடிய பழங்களில் ஒன்று.
பேரிச்சம் பழத்தை இரவில் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இதில் இருக்கும் நார்ச்சத்து நீண்ட நேரம் பசியை அடக்கி வைக்கும். பேரிச்சம்பழத்தில் இருக்கும் அற்புத சக்தி வயிற்றுப் பிரச்சனை இருப்பவர்களுக்கு மிகவும் சிறந்தது.
இரவில் பெரும்பாலும் பேரிச்சம்பழம் சாப்பிடுவது உடல் எடையை வேகமாக அதிகரித்து உடல் ஆரோக்கியத்துடனும் இருப்பதை உணரலாம். ஆனால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் காலையில் ஒன்று அல்லது இரண்டு சாப்பிட்டால் போதுமானது.

