Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வருத்தத்தில் சந்தியா சரவணன்.. ஓட்டப் பந்தயத்தில் மயங்கி விழுந்த சந்தியா.. இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்

raja rani 2 serial episode update 17-10-22

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் சரவணன் பிரிவால் தவிக்க சிவகாமி கோவில் அருகே காரை நிறுத்த சொல்லி விட்டு கடவுளிடம் வேண்டிக் கொண்டு பிறகு அங்கிருந்து கிளம்புகிறார்கள்.

இந்த பக்கம் சந்தியாவும் சரவணனை நினைத்து வருத்தப்பட அப்போது சரவணன் எழுதி வைத்த கடிதத்தை எடுத்து படித்து இன்னும் வருந்தப்படுகிறார். பிறகு இருவரும் போனில் பேசி கொள்ள இருவருமே ஒருவரை ஒருவர் மிஸ் செய்வதாக சொல்லி கொள்கின்றனர்.

அடுத்து சந்தியாவுக்கு முதல் நாள் பயிற்சி தொடங்க பிசிகல் டெஸ்ட் ரொம்ப முக்கியம். யார் டாப்பர் என்பதை தேர்வு செய்ய இது முக்கியம் என சொல்லி 800 மீ ஓட்டப்பந்தயம் நடத்துகிறார். இதில் சந்தியா ஓட முடியாமல் மயங்கி விழுந்தார். அடுத்து அவருக்கு சிவகாமிக்கு செய்து கொடுத்த சத்தியம் நினைவுக்கு வருகிறது. இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

raja rani 2 serial episode update 17-10-22
raja rani 2 serial episode update 17-10-22