Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பாரதியிடம் பேசாமல் போன ஹேமா..ஷர்மிளா எடுத்த முடிவு.. இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோட்

bharathi kannamma serial episode update

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் ஷர்மிளா வீட்டிற்கு ரோஹித்தை தேடி கோவில் நிர்வாகி ஒருவர் வந்து அவர் அவர் கட்டிக்க போற பொண்ணு வெண்பாவுக்காக கோவிலில் பிரார்த்தனை செய்தார், நன்கொடையாக பத்தாயிரம் கொடுத்திருந்தார். நன்கொடை கொடுத்ததற்காக பிரசாதத்தை கொடுத்து விட்டு மரியாதை செய்ய வந்ததாக சொல்ல ஷர்மிளா ரோகித் செட் பண்ணி அனுப்பிய ஆள் என நினைத்துக் கொண்டு அவரிடம் சத்தம் போட பிறகு அங்கு சாந்தி வர இவர் கோவில் நிர்வாகியா எனக் கேட்க ஆமாம் என சொல்கிறார்.

அடுத்து ஷர்மிளா கோவில் நிர்வாகியிடம் மன்னிப்பு கேட்க அவர் என்னாச்சு ஏன் இப்படி ரோஹித் மேல கோவமா இருக்கீங்க என கேட்க நடந்த விஷயங்களை சொல்ல ரோஹித் மீதானே உங்களது அபிப்பிராயம் சரிதானா என்பதை மீண்டும் ஒருமுறை பரிசோதனை செய்யுங்கள் என சொல்லிவிட்டு கோவில் நிர்வாகி கிளம்புகிறார். சௌந்தர்யாவிடம் இதைப் பற்றி பேசி முடிவெடுக்கலாம் என சர்மிளா திட்டமிடுகிறார்.

பிறகு இந்த பக்கம் வேணுவை மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு கொண்டு வர எல்லோரும் ஒன்றாக அமைந்து பேசிக் கொண்டிருக்கும் போது அங்கு வரும் ஹேமா தாத்தாவுக்கு முத்தம் கொடுத்து நலம் விசாரிக்கிறார். தொடர்ந்து பாரதி ஹேமாவிடம் பேச முயற்சி செய்ய ஹேமா பாரதியிடம் பேசாமல் முகத்தை திருப்பிக் கொண்டு ரூமுக்குள் சென்று விட இவளுக்கு என்ன ஆச்சு என யோசிக்கிறார். எல்லோருக்கும் ஹேமாவின் நடவடிக்கையில் சந்தேகம் வருகிறது.

அடுத்ததாக ஷர்மிளா வந்து சௌந்தர்யாவிடம் செய்த விஷயங்களை சொல்லி பிறகு இன்று கோவில் நிர்வாகி வந்து சொன்ன விஷயங்களை கேட்டு என்ன செய்வது என குழப்பத்தில் இருப்பதாக சொல்ல சௌந்தர்யா வெண்பாவிற்கு ஏற்ற மாப்பிள்ளை ரோஹித் தான். அவனிடம் பணம் இருந்தால் என்ன இல்லனா என்ன உங்களிடம் இருக்கும் பணம் போதாதா? அவன் நிச்சயம் வெண்பாவை நல்லபடியாக பார்த்துப்பான் என சொல்ல ஷர்மிளா இனி என்ன நடந்தாலும் வெண்பா கழுத்தில் தாலி கட்டப் போவது ரோகித் தான் என முடிவெடுக்கிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

 bharathi kannamma serial episode update

bharathi kannamma serial episode update