தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் மணிரத்தினம். அவரது இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வரலாற்று சாதனையை படைத்து வரும் திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இப்படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகி மாபெரும் வசூல் சாதனையை படைத்து வருகிறது.
பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள இப்படம் முதல் வாரத்தில் தமிழகத்தில் மட்டும் ரூ.200 கோடியை வசூல் செய்திருந்தது. தமிழ் சினிமா வரலாற்றிலேயே வெளியான முதல் வாரத்தில் 200 கோடியை வசூலித்த முதல் படம் இதுதான் என்ற பெருமையை பெற்றுள்ளது. மேலும் பொன்னியின் செல்வன் திரைப்படம் உலக அளவில் ரூ.400 கோடியை தாண்டி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இந்த மகிழ்ச்சியான செய்தியை உறுதி செய்யும் விதமாக லைக்கா நிறுவனம் twitter பக்கத்தில் உலகம் முழுவதும் 400 கோடி வசூல் சாதனையை பொன்னியின் செல்வன் திரைப்படம் ஈட்டி உள்ளதாக அதிகாரவபூர்வமான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
#PS1 ????️ hits another milestone!!
4️⃣0️⃣0️⃣+ Cr Worldwide Gross ????????✨
Catch the movie in theaters near you! ????️#PonniyinSelvan1 ????️ #ManiRatnam @arrahman @MadrasTalkies_ @LycaProductions @tipsofficial @tipsmusicsouth pic.twitter.com/GsfuVTtsBo
— Lyca Productions (@LycaProductions) October 12, 2022