தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் 6-வது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
நிகழ்ச்சி தொடங்கி இரண்டு நாட்கள் மட்டுமே ஆன நிலையில் யார் யார் எவ்வளவு நாட்கள் உள்ளே இருப்பார்கள்? நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார் என்பது குறித்து தகவல்கள் அடங்கிய லிஸ்ட் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த லிஸ்டில் திருநங்கை போட்டியாளர் ஷிவின் கணேசன் டைட்டில் வின்னர் எனவும் இரண்டாம் இடம் ஜி பி முத்து மற்றும் மூன்றாவது இடம் மணிகண்டன் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது அந்த அளவிற்கு உண்மையான தெரியவில்லை என்றாலும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


