தமிழ் சினிமாவில் பாலா இயக்கத்தில் வெளியான பிதாமகன் உட்பட பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றவர் நடிகை சங்கீதா. பாடகர் கிரிஷ் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
தற்போது வாரிசு படத்தில் தளபதி விஜய் உடன் இணைந்து நடித்து வருவது மட்டுமல்லாமல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவர்களில் ஒருவராக பங்கேற்று வருகிறார்.
இவர் அளித்த பேட்டி ஒன்றில் தன்னுடைய அம்மா தன்னை 14 வயதிலேயே நடிக்க அனுப்பி வைத்துவிட்டார். அண்ணன்கள் குடிகாரர்கள், அம்மா எந்த கவலையும் இல்லாமல் ஊதாரித்தனமாக செலவு செய்பவர். குடும்ப பாரம் மொத்தத்தையும் என்மீது இறக்கி வைத்து விட்டார்கள். என்னைப் பொறுத்தவரை என் அம்மா தப்பானவர் என பேசி உள்ளார் நடிகை சங்கீதா. இவருடைய இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


