Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அட்லி பிறந்தநாளில் கலந்து கொண்ட விஜய் ஷாருக்கான்.. வைரலாகும் ஃபோட்டோ

director atlee take photo with Vijay and shahrukh khan

தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக திகழ்பவர் தான் அட்லி. இவர் தற்பொழுது பாலிவுட்டில் முதல்முறையாக “ஜவான்” என்னும் திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இப்படத்தில் இரட்டை வேடங்களில் நடிகர் ஷாருகான் நடிக்க அவருக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் தீபிகா படுகோன் நடித்து வருகின்றனர். இப்படம் அடுத்த ஆண்டு கோடை கொண்டாட்டமாக வெளியாகவுள்ள நிலையில், தன்னுடைய 36 வது பிறந்தநாளை  அட்லி கொண்டாடியுள்ளார்.

அந்நிகழ்ச்சியில் தளபதி விஜய் மற்றும் ஷாருக்கான் இருவரும் கலந்து கொண்டிருக்கின்றனர். அப்போது அவர்களுடன் இயக்குனர் அட்லி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அதில், “இதைவிட என் பிறந்தநாளுக்கு என்ன கேட்க முடியும். எனது தூண்களுடன் கொண்டாடிய சிறந்த பிறந்தநாள் இது. மை டியர் ஷாருக் மற்றும் என்னோட அண்ணன், என்னோட தளபதி விஜய்” என்று தனது மகிழ்ச்சியை தெரிவித்து இருக்கிறார். இந்த மூவரின் புகைப்படத்தையும் ஒன்றாக கண்ட ரசிகர்கள் வியப்பில் இருக்கின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Atlee (@atlee47)