இந்திய திரை உலகில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். இவர் தற்பொழுது நெல்சன் இயக்கத்தில் உருவாகும் “ஜெயிலர்” திரைப்படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்து வருகிறார். இதில் நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகளின் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகி படக்குழுவினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அதாவது சமீபத்தில் வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் அவ்வப்போது இணையத்தில் லீக் ஆகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்து வந்த நிலையில் தற்போது பலத்த கட்டுப்பாடுகளோடு நடைபெற்று வந்த ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் தற்போது லீக் ஆகி உள்ளது.
அண்மையில் ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு கிழக்கு கடற்கரை சாலையில் துவங்கினர். அதன்பின் எண்ணூரில் நடத்தினர். இந்நிலையில் ரஜினி நடித்த காட்சியை யாரோ போட்டோ எடுத்து இணையத்தளத்தில் வெளியிட்டு இருக்கின்றனர். ரஜினிகாந்த் நாற்காலியில் உட்கார்ந்து இருக்கும் காட்சி மற்றும் கோட் சூட் அணிந்து சக நடிகர்களுடன் பேசி நடிக்கும் காட்சி ஆகியவை அதில் இடம் பெற்றுள்ளது. இது தற்போது இதயத்தில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.
