Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஜய் டிவி TRP யை பின்னுக்கு தள்ளி ஜீ தமிழ் படைத்த சாதனை

zee tamil channel thavamai thavamirunthu serial in trp record

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் தவமாய் தவமிருந்து.

பசங்க சிவக்குமார் மற்றும் அனிதா நாயர் ஆகியோர் மார்க்கண்டேயன் சீதா கதாபாத்திரத்தில் நடிக்க சந்தியா ராமச்சந்திரன் மலர் வேடத்திலும் பிரிட்டோ மனோ பாண்டி என்ற கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர். மேலும் பல பிரபலங்கள் இந்த சீரியலில் இணைந்து நடித்து வருகின்றனர்.

பிள்ளைகளே பெற்றோருக்கு துரோகம் செய்ய அடுத்து அவர்களின் வாழ்க்கையில் நடப்பது என்ன? இதனை மார்க்கண்டேயன் சீதா எப்படி எதிர்கொள்கின்றனர் என்பது தான் இந்த சீரியலின் கதைக்களம்.

இன்றைய சமூகத்தில் பல குடும்பங்களில் நடக்கும் உண்மை சம்பவங்களை போலவே இந்த சீரியல் கதைக்களம் இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக சமீபத்தில் மார்க்கண்டேயனுக்கு பிள்ளைகள் செய்த துரோகங்கள் மொத்தமும் தெரிய வர மரண படுக்கை வரை சென்று வந்த அவர் வீட்டை கோடு போட்டு பிரித்தார்.

சீரியலின் இந்த பரபரப்பான திருப்பங்கள் TRP ரேட்டிங்கில் உச்சத்தை தொட்டுள்ளது. பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவி சேனலில் ஒளிபரப்பாகி வரும் சிப்பிக்குள் முத்து சீரியலை பின்னுக்கு தள்ளி சென்னை ஏரியா TRP ரேட்டிங்கில் சாதனை படைத்துள்ளது. இதனால் வரும் நாட்களிலும் இந்த சீரியலின் TRP ரேட்டிங் உயரும் என சின்னத்திரை வட்டாரங்களில் சொல்லப்பட்டு வருகிறது.

zee tamil channel thavamai thavamirunthu serial in trp record
zee tamil channel thavamai thavamirunthu serial in trp record