Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களின் லிஸ்டில் இணைந்த அல்லு அர்ஜுன்

Actor allu-arjun-salary-for-pushpa-2 Movie

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். தெலுங்கு திரைப்படம் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவரது நடிப்பில் உருவான திரைப்படம் தான் புஷ்பா. சுகுமார் இயக்கத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உலகம் முழுவதும் தான் இந்தியா திரைப்படமாக பல மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் வசூலில் மாபெரும் சாதனை படைத்து மிகப் பெரிய வெற்றியை பெற்றது.

படத்தில் ராஷ்மிகா மந்தனா, சுனில், பகத் பாசில், மைம் கோபி என பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சமந்தா ஓ சொல்றியா மாமா பாடலுக்கு நடனமாடி இருந்தார். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்க உள்ளது.

புஷ்பா படத்திற்காக குறைந்த அளவிலேயே சம்பளம் வாங்கிய அல்லு அர்ஜுன் இந்த இரண்டாம் பாகத்திற்காக ரூபாய் 125 கோடி சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் இவர் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் இணைந்துள்ளார்.

Actor allu-arjun-salary-for-pushpa-2 Movie
Actor allu-arjun-salary-for-pushpa-2 Movie