பிரபல தென்னிந்தியா நடிகையானா ராய் லட்சுமி தமிழில் “கற்க கசடற” என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ள ராய் லட்சுமி தாம் தூம், காஞ்சனா, அரண்மனை போன்ற படங்களின் மூலம் அனைவரது மனதிலும் இடம் பிடித்தார். இவர் தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழில் “தி லெஜன்ட்” திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி அனைவரையும் கவர்ந்திருந்தார்.
இந்நிலையில் ராய் லட்சுமி பட வாய்ப்புகள் அதிகரிக்க வேண்டும் என்பதால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் போன்றவற்றை பதிவிட்டு ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருக்கிறார்.
அந்த வகையில் தற்போது ராய் லட்சுமி கூட்டமாக இருக்கும் குதிரைகளுக்கு மத்தியில் எடுக்கப்பட்டு இருக்கும் போட்டோ ஷூட் புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து இணையத்தை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்.
View this post on Instagram