கடந்த ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படம் தான் ‘புஷ்பா’. இப்படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கியிருந்தார். இதில் கதாநாயகியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார்.
செம்மரக்கட்டை கடத்தலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி மலையாளம், கன்னடம் போன்ற பல மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை பெற்றிருந்தது.
தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதில் ‘புஷ்பா 2’ படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளதாக புஷ்பா படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நேற்று சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளது. அந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.
#PushpaRaj is back!
This time to Rule ????#PushpaTheRule Pooja Ceremony tomorrow????India's most anticipated sequel is going to be BIGGER ❤️????
Icon Star @alluarjun @iamRashmika @ThisIsDSP @aryasukku pic.twitter.com/791FhTOlC5
— Mythri Movie Makers (@MythriOfficial) August 21, 2022

