தமிழ் சினிமாவில் தி லெஜன்ட் என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகி உள்ளார் லெஜன்ட் சரவணன். சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான இவர் சில விளம்பர படங்களில் நடித்ததை தொடர்ந்து இந்த படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்ற இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இன்டர்நேஷனல் லெவலில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். தற்போது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.
மொமண்ட்ஸ் வித் ரஜினிகாந்த் என இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.
Moments with Superstar @rajinikanth #Rajinikanth #TheLegend pic.twitter.com/sScxOBIXix
— Legend Saravanan (@yoursthelegend) August 20, 2022