Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

குழப்பத்தில் இருந்த சிவகாமி.. சந்தியா செய்த செயல்.. இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்

raja rani 2 serial episode update

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடு கோவிலுக்கு சென்று வந்த போது அங்கு நடந்த விஷயங்களால் வள்ளி சிவகாமியை யோசித்து முடிவது என சொல்லிக் கொண்டு வருகிறார். இந்த நேரத்தில் வழியில் கீரை விற்கும் பாட்டி ஒருவர் மயங்கி விழுந்த இவர்கள் மூவரும் சென்று அந்த பாட்டுக்கு தண்ணீர் கொடுத்து மயக்கத்தில் இருந்து மீட்டு வருகின்றனர். பிறகு என்ன ஆச்சு எனக்கு அந்த பாட்டு என் மருமக என்ன நல்லா தான் பாத்துக்கிட்டா வேலைக்கு போக ஆரம்பிச்சா என்ன மதிக்கிறதே கிடையாது என சொல்ல பாட்டி சிவகாமியிடம் நாளைக்கும் இதே நிலைமை உனக்கும் வரலாம் யோசிச்சு முடிவு பண்ணு என கூறுகிறார்.

வீட்டுக்கு வந்த சிவகாமியிடம் ரவி என்ன ஆச்சு என கேட்க சிவகாமி நடந்த விஷயங்களை கூறுகிறார். அதன் பிறகு ரவி அம்மா அந்த காலத்து ஆளு அவங்களுக்கு சொல்லி புரிய வைக்க முடியாது நீ உன்னுடைய முடிவில் இருந்து மாறாத என கூறுகிறார். பிறகு சிவகாமி இதே யோசனையில் இருக்க அங்கு வந்த பாட்டி நல்லா யோசி என சொல்வது மட்டுமல்லாமல் ஊரில் உள்ள ஒரு ஒருவருக்கு போன் போட்டு அவள் மருமகள் வேலைக்கு போவதால் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை என்ற விஷயத்தை சொல்ல வைக்கிறார்.

இதனால் சிவகாமி குழப்பத்தில் இருக்க மறுநாள் காலையில் 4:00 மணிக்கு அலாரம் வைத்து சந்தியா வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்துவிட்டு வாசலில் அமர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார். தூக்கத்திலிருந்து எழுந்து வந்த சிவகாமி எல்லா வேலையும் யார் பார்த்தது என குழம்பிக் கொண்டிருக்க பிறகு மயிலும் சிவகாமியும் வெளியில் வந்து சந்தியா படிப்பதை பார்க்கின்றனர். நீதான் எல்லா வேலையும் செஞ்சியா? என சொல்ல ஆமா அத்தை வேலைக்கு போனாலும் என்னுடைய கடமையிலிருந்து தவறக்கூடாது என கூறுகிறார். அதற்காகத்தான் இப்போது இருந்தே பழகிக் கொள்கிறேன் என சந்தியா சொல்ல சிவகாமி மகிழ்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 எபிசோட் முடிவடைகிறது.

 raja rani 2 serial episode update

raja rani 2 serial episode update