Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நடிகைகளுக்கு எந்த மரியாதையும் கிடையாது.. சினிமா குறித்து தமன்னா ஓபன் டாக்

tamannaah-about-cinema-field issue

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தேனி சினிமாவில் பழமொழி படங்களில் நடித்து வருபவர் தமன்னா. தமிழில் அஜித், விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு என பல நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.

மேலும் சோலோ நாயகியாகவும் இவர் தற்போது படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் சினிமாவில் நடிகைகளுக்கு ஏற்படும் பிரச்சனை பற்றி பேசி உள்ளார்.

நடிகைகளுக்கு எந்த மரியாதையும் கிடையாது ஏன் ஹீரோக்களுக்கு கொடுக்கும் சம்பளத்தில் பாதி சம்பளம் கூட கொடுப்பதில்லை. நடிகைகள் எதாவது சொன்னால் அதை கேட்க மாட்டார்கள். இன்றைய கால சினிமாவில் போஸ்டரில் நடிகைகளின் முகம் வெளி வருவது கூட பெரிய விஷயமாக இருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும். ஆனால் எப்போது மாறும் என தெரியவில்லை என பேசி உள்ளார்.

நடிகை தமன்னா சினிமா குறித்து இருக்கும் பேட்டி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

tamannaah-about-cinema-field issue
tamannaah-about-cinema-field issue