Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நயன்தாராவின் கவர்ச்சி புகைப்படத்தை வர்ணித்து விக்னேஷ் சிவன் வெளியிட்ட போட்டோ ..

actress nayanthara-in-honeymoon-photos

தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை நயன்தாரா. தமிழ் தெலுங்கு மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்து வரும் இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் அவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு சில படங்களில் நடித்து வந்த நயன்தாரா சமீபத்தில் புட்பாய்சன் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து தற்போது இருவரும் ஸ்பெயின் நாட்டிற்கு ஹனிமூன் சென்று உள்ளனர்.

அங்கு கருப்பு நிற கவர்ச்சி உடையில் நயன்தாராவை போட்டோ எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள விக்னேஷ் சிவன் டால் அடிக்கும் ரத்தினமே, மினுமினுக்கும் முத்தாரமே என பாடல் வரிகளை பதிவு செய்துள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.