கிரீன் டீ அதிகமாக குடித்தால் பக்க விளைவுகள் அதிகமாக எதிர்கொள்ள வேண்டும்.
பொதுவாக க்ரீன் டீ யை அனைவரும் கொலஸ்ட்ராலை குறைத்து உடலை பிட்டாக வைத்திருப்பதற்காக குடிப்பார்கள். கிரீன் டீயை தொடர்ந்து குடிப்பதன் மூலம் உடல் எடையை குறைத்து நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.
கிரீன் டீ அதிகம் குடித்தால் வயிற்றில் எரிச்சல் மற்றும் பிடிப்புகள் வரக்கூடும்.
இது வயிற்றில் அமிலத்தன்மையை அதிகரிப்பதால் வயிற்றுப்போக்கு ஏற்படக்கூடும்.
இதனைத் தொடர்ந்து கிரீன் டீ ஒற்றைத் தலைவலியை ஏற்படுத்தும். மேலும் நாம் கிரீன் டீயை வெறும் வயிற்றில் குடித்தால் அசிடிட்டி பிரச்சனை வரக்கூடும். எனவே உணவு சாப்பிட்ட பிறகு கிரீன் டீ சாப்பிடுவது சிறந்தது.
எட்டு மணி நேரம் சரியாக தூங்க முடியாத நபர்கள் கிரீன் டீ குடிப்பதை நிறுத்த வேண்டும். ஏனெனில் இது தூக்கமின்மையை ஏற்படுத்திவிடும்.
மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு கப்புக்கு மேல் கிரீன் டீ குடித்தால் அது அவர்களுக்கு மிகவும் ஆபத்தை ஏற்படுத்தும்.
இறுதியாக கிரீன் டீ அதிகமாக குடிக்கும் போது இரும்புச்சத்து குறைந்து உடல் பலவீனமாக தெரியும்.