Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் கே ஜி எஃப் 2.. எந்த சேனல் எப்போது தெரியுமா?

kgf-2 movie in-zee-tamil-tv

தமிழ் சின்னத்திரையில் ஒவ்வொரு சேனல்களுக்கும் இடையே இருக்கும் போட்டியை TRP ரேட்டிங்கை வைத்து அளந்து கூறுவார்கள். TRP ரேட்டிங்கை உயர்த்தும் நோக்கத்தில் தான் அனைத்து சேனல்களும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும்.

அதிலும் குறிப்பாக பொங்கல், தீபாவளி போன்ற விழா காலங்களை குறி வைத்து புத்தம் புதிய திரைப்படங்கள், சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பாக்குவது வழக்கம்.

வரும் விநாயகர் சதுர்த்திக்கும் TRP ரேட்டிங்கை உயர்த்தும் வகையில் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என அனைத்து தொலைக்காட்சி சேனல்கள் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப திட்டமிட்டு வருகின்றன.

இப்படியான நிலையில் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ராக்கிங் ஸ்டார் யஷ், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் என பலர் நடிப்பில் வெளியாகி 1000 கோடிக்கும் மேல் வசூல் வேட்டையாடி வெற்றி பெற்ற கே ஜி எஃப் 2 திரைப்படத்தை தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக ஒளிபரப்ப உள்ளது.

இதனால் இந்த விநாயகர் சதுர்த்தியில் மற்ற சேனல்களை காட்டிலும் ஜீ தமிழின் TRP ரேட்டிங் உச்சத்தை தொடும் என எதிர்பார்க்கலாம். முதல் முறையாக தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகும் கே ஜி எஃப் 2 படத்தை பார்க்கவே ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள் என சொல்லலாம்.

kgf-2 movie in-zee-tamil-tv
kgf-2 movie in-zee-tamil-tv