உடலில் ரத்த பற்றாக்குறை இருக்கும் பொழுது நாம் என்னென்ன பழங்களை சாப்பிட வேண்டும் என்று பார்க்கலாம்.
நம் உடலில் அனைத்து விதமான சத்துக்கள் இருந்தாலும் ரத்தம் என்பது அடிப்படையான ஒன்று. ரத்தம் உடலில் குறைவாக இருந்தால் நாம் பலவிதமான நோய்களை எதிர்கொள்ள நேரிடும். மேலும் ரத்தம் குறைவாக இருப்பவர்கள் பலவீனமானவர்களாகவே இருப்பார்கள்.
மேலும் நம் உடலில் ரத்தம் குறைவாக இருந்தால் தலைசுற்றல் பலவீனம் சோர்வு தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் ஒரு அறிகுறியாகும். எனவே உணவில் இரும்பு சத்து அதிகம் உள்ள உணவுகளை நாம் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.
முதலில் ஆரோக்கியத்திற்கு முக்கியமான பழங்களில் ஒன்று ஆப்பிள். இதில் இரும்புச் சத்து அதிகரித்து ஹீமோகுளோபின் குறைபாட்டை நீக்கி நோய் எதிர்ப்பு சக்தியை தரும்.
பிறகு மாதுளை பழம் சாப்பிடுவதன் மூலம் உடல் எடை கூடி போதிய ரத்தம் உற்பத்தி மற்றும் முகப்பொலிவையும் கொடுக்கும். இதனைத் தொடர்ந்து பீட்ரூட் உணவில் சேர்த்துக் கொண்டால் ஒரு வாரத்திலேயே உடலில் ரத்தம் உற்பத்தி அதிகம் ஆவது மட்டுமல்லாமல் இரும்புச் சத்தும் அதிகமாகும்.
இறுதியாக திராட்சை பழத்தை சாப்பிடுவதன் மூலம் இரும்பு சத்து அதிகரிக்க சிறந்தது. மேலும் திராட்சை கண் பார்வைக்கு சிறந்தது என்று அனைவரும் அறிந்ததே..
இப்படி ஆரோக்கியமான பழங்களை சேர்த்து நம் உணவில் சாப்பிடும் போது ரத்த பற்றாக்குறை இல்லாமல் ஆரோக்கியமாக வாழலாம்.