Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கோபியை கைது செய்த போலீஸ்.. விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியில் வெளியான ப்ரோமோ வீடியோ

baakiyalakshmi-team-in-raju-veetla-party

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. பாக்கியாவுக்கு மத்த உண்மையை தெரிந்ததை அடுத்து வீட்டை விட்டு வெளியே போனார் மீண்டும் வீட்டுக்கு வந்து கோபி கேட்ட விவாகரத்து கொடுக்க தயாராக இருப்பதாக கோர்ட்டுக்கு கிளம்பி விட்டார்.

கோபியும் கோர்ட்டுக்கு கிளம்பி போன நிலையில் இருவருக்கும் விவாகரத்து வழங்கி நீதிமன்றம் உத்தரவிடுவது போன்ற ப்ரோமோ வீடியோ வெளியாகி இருப்பதை நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள். இந்த நிலையில் பாக்கியலட்சுமி குழுவினர் இந்த வாரம் ராஜு வீட்டில் பார்ட்டி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் ராமர் லட்சுமி ராமகிருஷ்ணன் வேடத்தில் வர அவரிடம் ராதிகா மற்றும் பாக்யா என இருவரும் பஞ்சாயத்து செய்கின்றனர். மேலும் கோபியை போலீஸ் கைது செய்து விட்டதாக முகமூடி அணிந்த ஒருவரை போலீசார் கைது செய்தது போன்ற ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இதனைப் பார்த்த ரசிகர்கள் நிஜத்தில் சீரியலில் இப்படி நடந்தால் சூப்பராக இருக்கும் என கமெண்ட் செய்து வருகின்றனர்.