Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பங்க்ஷனில் கலந்து கொண்ட வெண்பா.. பாரதி கொடுக்கப் போகும் அதிர்ச்சி… இன்றைய பாரதிகண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2 எபிசோடு அப்டேட்

bharathi kannamma and raja rani2 serial episode update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்கள் பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் ஹேமா மற்றும் லட்சுமி என இருவரும் விளையாடிக்கொண்டிருக்கும் போது ஹேமா தனக்கு சித்தப்பா சித்தி தாத்தா பாட்டி என எல்லோரும் கிப்ட் கொடுத்தாங்க என சந்தோஷமாக சொல்கிறார். மேலும் டாடி 3 டிரஸ் எடுத்துக் கொடுத்தார் என சொல்கிறார். இதைக் கேட்டு லட்சுமி வருத்தப்படுகிறார்.

அதன் பிறகு ஹேமா உனக்கு யார் யார் என்ன கிப்ட் கொடுத்தாங்க எனக்கு கேட்க எனக்கு எங்கம்மா காலையிலே கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தாங்க அதைவிட பெரிய கிப்ட் எதுவுமே இல்லை என சொல்ல இத்தனைக்கும் அம்மா இல்லாத காரணத்தினால் வருத்தப்படுகிறார் ஹேமா.

இந்த பக்கம் பாரதி ஹாஸ்பிடல் இருக்க அப்போது வெண்பா போன் செய்து உன் வீட்டு பங்க்ஷனுக்கு என்ன ஒரு வார்த்தை கூட கூப்பிடல என பேச அப்போது பாரதி அன்னைக்கு உன் வீட்டு பங்க்ஷன்ல உன்னை கல்யாணம் பண்ணிக்க எனக்கு விருப்பமில்லைன்னு சொன்னதுனால எந்த முகத்தை வைத்துக்கொண்டு கூப்பிடறதுனு தெரியல என பாரதி செல்கிறார். பிறகு சரி நீ கண்டிப்பா பங்க்ஷனுக்கு வரணும் என கூறுகிறார். ஹேமாவோட அம்மா யாருன்னு சொல்ல போறியா? யாரை சொல்ல போற கண்ணம்மாவையா என கேட்கிறார். ஆனால் பாரதி அதை ஃபங்ஷனில் நீயே பார்த்து தெரிஞ்சுக்கோ என சொல்லி போனை வைத்து விடுகிறார்.

இந்த பக்கம் ராஜா ராணி குடும்பத்தினர் வர அவர்களை வரவேற்று அனைவரும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் வெண்பா என்ட்ரி கொடுக்கிறார். என் வீட்டு பங்ஷன்ல வந்து என்ன அர்த்தம் போட்டீங்க என எல்லோரையும் கலாய்த்து விட்டு தன்னை பாரதி தான் வர சொன்னேன் ஏதோ முக்கியமான பங்கு இருக்கு என சொன்னான் என சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இப்படியாக இன்றைய முதல் அரை மணி நேர எபிசோட் முடிவடைகிறது.

 bharathi kannamma and raja rani2 serial episode update

bharathi kannamma and raja rani2 serial episode update