Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மேடையில் பலமொழியில் பேசிய லெஜன்ட் சரவணா.. வைரலாகும் தகவல்

legend-saravana-movie-promotion details

லெஜெண்ட் சரவணன் முதல்முறையாக தயாரித்து கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் தான் “தி லெஜன்ட்”. இப்படத்தை ஜேடி-ஜெர்ரி இயக்கியுள்ளனர். இதில் லெஜெண்ட் சரவணன் அவர்களுடன் ஊர்வசி ரவுத்தெல்லா கதாநாயகியாக இணைவதோடு தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியுள்ளார்.

மேலும் ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இப்படத்திற்க ஹாரிஸ் ஜெயராஜ் மிக பிரம்மாண்டமாக இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்லவர் வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் இப்படம் வருகின்ற ஜூலை 28ஆம் தேதி வெளியாக உள்ளதால் இப்படத்தின் பிரமோஷன் பணிகள் தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது.

அதில் தற்போது நடத்தப்பட்ட பிரமோஷன் நிகழ்ச்சியில் ஊர்வசி ரவுத்தெலா மற்றும் ராய் லட்சுமி உடன் லெஜெண்ட் சரவணா கலந்து கொண்டார். அப்போது மேடையில் பேசிய லெஜன்ட் சரவணன் அவர்கள் திடீரென்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் பேசி அனைவரும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். தற்போது இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

legend-saravana-movie-promotion details
legend-saravana-movie-promotion details