வெங்கட் பிரபுவின் ‘மாநாடு’ திரைப்படத்தின் மூலம் சூப்பர் கம் பேக் கொடுத்திருக்கும் சிம்பு இதில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து கொண்டிருக்கும் இந்த படம் செப்டெம்பர்-15ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
அதனைத்தொடர்ந்து தற்போது அவர் ‘பத்து தல’ படத்தின் பணிகளில் ஈடுபட்டு வருகிறார், இப்படத்தில் கவுதம் கார்த்திக் மற்றும் பிரியா பவானி ஷங்கர் உடன் நடிக்கின்றனர். இந்நிலையில் சிம்புவின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது நடிகர் சிம்பு அடுத்ததாக சூர்யாவின் ‘சூரரைப்போற்று’ படத்தை இயக்கிய பிரபல இயக்குனரான சுதா பொங்கரா இயக்க உள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இப்படத்தை தயாரிக்க கேஜிஎப் மற்றும் சலார் போன்ற படங்களை தயாரித்த பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான ஹோம்பேல் பிலிம்ஸ் தயாரிக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


