Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிரபல இயக்குனருடன் கூட்டணி அமைத்த அருண் விஜய்.. அடுத்த படம் குறித்து வெளியான தகவல்

arun-vijay-new-movie-details

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் அருண் விஜய். இவர் பிரபல நடிகரான விஜயகுமாரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் அருண் விஜயின் நடிப்பில் வெளியான “O My Dog” திரைப்படம் ரசிகர்களின் இடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

அடுத்த படத்தில் பிரபல இயக்குனரோட நடிக்க தயாராகி இருக்கும் அருண் விஜய் – வைரலாகும் தகவல்.
இதனை தொடர்ந்து அருண் விஜய் அவர்கள் இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகி இருக்கும் “யானை” திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இதில் இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் யோகிபாபு, பிரகாஷ் ராஜ், ராதிகா, தலைவாசல் விஜய், குக் வித் கோமாளி புகழ், அம்மு அபிராமி ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த “யானை” திரைப்படம் ஜூலை 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையே விமர்சன ரீதியாகவும், வசூல் செய்தியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இப்படம் வசூலில் இதுவரை தமிழகத்தில் மட்டுமே ரூ. 12.5 கோடி வரை வசூல் செய்துள்ளது.

படத்தை தொடர்ந்து அருண் விஜய் “அக்னி சிறகுகள், பார்டர், பாஸ்கர்” போன்ற படங்களை கைவசமாக வைத்துள்ளார். இருப்பினும் அருண் விஜய் தற்போது பிரபல இயக்குனரான ஏ.எல். விஜய்யுடன் கூட்டணி அமைத்துள்ளாராம். மேலும் இப்படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்றும் கூடிய விரைவு இப்படத்திற்கான அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

 arun-vijay-new-movie-details

arun-vijay-new-movie-details