Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அப்பா அம்மாவை ஒதுக்கிய விஜய்க்கு அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் தெரியுமா? தீயாக பரவும் தகவல்

vijay-parents-prays-for-thalapathy vijay

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இயக்குனர் எஸ் எஸ் சி அவர்களின் மகனாக திரையுலகில் அறிமுகமான இவர் பல்வேறு கிண்டல்களுக்கு பிறகு தன்னுடைய விடாமுயற்சியால் இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்துள்ளார். தளபதி விஜய் இந்த இடத்தை பிடிக்க முக்கியமான காரணங்களில் ஒன்று அவருடைய தந்தை எஸ் ஏ சந்திரசேகர் அவர்களும் தான்.

ஆரம்ப காலகட்டத்தில் விஜய் எந்த மாதிரியான படங்கள் நடிக்க வேண்டும் என்பது குறித்த கதை தேர்வை எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் தான் மேற்கொண்டு வந்தார். ஆனால் தற்போது இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனி வீடுகளில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில் எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள் தன்னுடைய எண்பதாவது பிறந்தநாளை மனைவியுடன் கொண்டாடினார். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தளபதி விஜய் கலந்து கொள்ளவில்லை. அதன் பிறகு திருக்கடையூர் அபிராமி கோவிலில் ஆயுள் விருத்தி வேண்டி சிறப்பு பூஜை செய்துள்ளனர். இந்த பூஜையிலும் தளபதி விஜய் கலந்து கொள்ளவில்லை.

இருப்பினும் இவர்கள் தளபதி விஜய் வாழ்க்கை மேலும் மேலும் சிறப்பாக இருக்க வேண்டும் என அவரது பெயரில் அர்ச்சனை செய்துள்ளனர். இந்த விஷயங்கள் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

vijay-parents-prays-for-thalapathy vijay
vijay-parents-prays-for-thalapathy vijay