பூண்டு பயன்படுத்தி உடல் எடையை எளிமையான முறையில் குறைப்பது எப்படி என்று பார்க்கலாம்.
பூண்டை தொடர்ந்து பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறைய வாய்ப்புள்ளது. பூண்டு பச்சையாக சாப்பிடுவதன் மூலம் உடல் ஆரோக்கியமாக இருப்பது மட்டுமில்லாமல் உடலில் பலவீனத்தை நீக்க பூண்டு உதவுகிறது.
பூண்டை உட்கொள்வதன் மூலம் நம் உடலில் இருக்கும் அழுக்குகளை வெளியேற்றி இதயத்தை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
உடல் எடையை குறைக்க மற்றும் தொப்பையை கரைக்க பூண்டு பற்களை வெறும் வயிற்றில் சாப்பிடுவது மற்றும் வெதுவெதுப்பான நீரில் பூண்டு எலுமிச்சை சாறு சேர்த்து பானமாக குடிப்பது போன்று செய்தால் இரண்டு மடங்காக உடல் எடையை குறைக்க வழி வகுக்கும்.
இப்படி தினமும் சாப்பிட்டு வந்தால் நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருவது மட்டுமில்லாமல் கலோரிகளையும் குறைக்கும்.
இதனால் நம் உடல் எடை விரைவில் குறைய வழிவகுக்கிறது.